அகில இந்திய ஆக்கி : கடைசி லீக் ஆட்டத்தில் கோவில்பட்டி அணி வெற்றி ; 30ந்தேதி காலிறுதி போட்டிகள்
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான இன்று (29ந் தேதி )மாலை5.15 மணியளவில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின.
நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி 14, 20, 25, 26, 39, 40 மற்றும் 60 வது நிமிடங்களில் முறையே சுனில் (பெனால்டி கார்னர்), அர்மான் குரேஷி (பெனால்டி கார்னர்), ரகுநாத் (பெனால்டி கார்னர்), உத்தம் சிங் (பீல்டு கோல்), விக்ரம்ஜித்சிங் (பீல்டு கோல்), அப்பன் யூசுப் (பீல்டு கோல்), குர்ஜிந்தர் சிங் (பீல்டு கோல்), ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
எதிர்த்து போட்டியிட்ட கர்நாடக ஹாக்கி பெல்லாரி அணியினர் திணறினார்கள். ஆடடம் முடியும் வரை அவர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இறுதியில் 7:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி அபார வெற்றி பெற்றது.
சரவணன்,சுரேஷ் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருதை நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் விக்ரம்ஜித்சிங் பெற்றார்.
மாலை 6.45 மணியளவில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரடேரியேட் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின.
ஆட்ட இறுதியில் 4:3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றிபெற்றது.
அஸ்வனி குமார்,பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் பரத் மஹாலிங்கப்பாவுக்கு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அணி
இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணி வீரர் பிருதிவி பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
51-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் மனோஜ்குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
54-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் ஆனந்தராஜ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
57-வது நிமிடத்தில் இன்டக்ரல் கோச் பேக்டரி அணி வீரர் பிரிதிவி பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
60-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் நந்தகுமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்
இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிரியாஸ் கவுடா மற்றும் முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் திலீபனுக்கு வழங்கப்பட்டது.
காலிறுதி போட்டிகளின் விவரம்
நாளை 30 ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் மோதுகின்றன.
மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதி போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மோதுகின்றன.
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் நான்காவது காலிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதுகின்றன.