`ஒரே நாடு, ஒரே விலைக்கொள்கை’; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் வலியுறுத்தல்
.ஒவ்வொரு ஆண்டும் மே 30 ஆம் தேதி(இன்று)நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் எழுச்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, . அதன்படி கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற
நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் எழுச்சி தின விழாவுக்கு நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்
கணேஷ் குமார், பாலசுந்தரம், அசோக்குமார், சந்திரக்கண்ணன் ,அசோக் , அழகுலட்சுமணன், பரமேஸ்வரன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவரி அலுவலர் முத்துராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ஜோதிபாசு, கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சூடாமணி, வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகிய யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு
பேரணியை தொடக்கி வைத்துபொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நகரின் முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டினார்
பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும்,புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டியும், பசுமையை பாதுகாக்கும் விதமான பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்
விநியோகஸ்தர்கள் தினகரன்,ரவிச்சந்திரன், தினேஷ் பாலாஜி, செல்லக்கனி,ஜெயமணி,
ஜெயபாஸ்கர்,கோபாலகிருஷ்ணன்,செல்வராஜ்,சந்தனகுமார்,குமரன்,பாலமுருகன், ராஜகுரு, உள்பட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீனிவாசன் செய்திருந்தார்
பேரணி இறுதியில் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாரம்பரிய வணிகம் பாதுகாக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாரம்பரிய வணிகம் தான் மக்களுடன் தொடர்பில் இருந்தது. ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுதத வேண்டும். ஒரே நாடு ஒரே விலை கொள்கை கொண்டு வர வேண்டும். பாரம்பரிய வணிகத்துக்கு ஒரு விலையையும், ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஒரு விலையையும் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இ காமர்ஸ் வணிகத்தில் அரசுக்கு பல்வேறு வரி இழப்பு ஏற்படுகிறது.
இதை கவனத்தில் கொண்டு அரசு தலையிட்டு ஒரே நாடு ஒரே விலை கொள்கையை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.