இன்று ஒய்வு பெறும் நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

 இன்று ஒய்வு பெறும் நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

தமிழ்நாடு காவல்துறையின் என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பேசப்பட்டவர்  வெள்ளத்துரை. 25 வருட காவல்துறை பணியில் 12 என்கவுன்ட்டர்கள் வெள்ளத்துரையால்  நடத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவில் வெள்ளத்துரை இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வீரப்பனைச் சுட்டுப்பிடித்த வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆனவர்  வெள்ளத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.:

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடி மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததின் மூலம் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர் பெற்றார் வெள்ளத்துரை.

 இந்நிலையில் தற்போது பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளைத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்  திருப்பாச்சேத்தியில் குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்தார். இந்த மரணத்தில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வெள்ளத்துரை மீது தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக தற்போது பணியாற்றி வந்த வெள்ளத்துரை இன்று  ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *