மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு
![மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு](https://tn96news.com/wp-content/uploads/2022/10/download-2-10.jpg)
திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது:-
வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள். பிளவு பட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.
அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அண்ணன்- தம்பி மாதிரி. பா.ஜ.க.வினர் சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர். அதனால் தான் அ.தி.மு.க.வை சேரவிடாமல் பா.ஜ.க. முட்டுக்கட்டை போடுகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)