115வது ஜெயந்தி : கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

 115வது ஜெயந்தி : கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவனர் இனாம் மணியாச்சி சோலையப்ப தேவர் குடும்பத்தினர், சிலை முன்பு அதிகாலையில் பொங்கலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் சத்யா மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா
பின்னர் கடம்பூர் ராஜு கூறுகையில்,” மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட அ.திமு.க. பாடுபடும்”‘ என்றார்.
தி.மு.க. நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில் மாவட்ட செயலாளர் வேல்ராஜா மற்றும் பலரும் மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க.மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலும், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். காமராஜர் தலைமையிலும், த.மா.கா. சார்பில் நகர தலைவர் ராஜகோபால் தலைமையிலும், தமிழ் பேரரசு கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மாவீரன் பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மா.காளிதாஸ், தலைவர் ராஜபாண்டி, செயலாளர் சண்முகராஜ், துணை செயலாளர் முருகன், உள்ளிட்ட பலர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு தேவர் மக்கள் ராஜ்ஜியம் சார்பில் அதன் நிறுவன தலைவர் மு.பாலமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *