கோவில்பட்டியில் பால்குட ஊர்வலங்கள்; தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நகரம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தேவர் சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் வெவ்வேறு இடங்ககளில் இருந்து பெண்கள் தனித்தனி குழுக்களாக பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதன் காரணமாக கோவில்பட்டி நகரம் பரபரப்புடன் காணப்ட்டத
அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு நிறுவனர் அண்ணாதுரை தலைமையில் இலுப்பை யூரணியில் இருந்து 1115 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து சிலைக்கு வழிபாடு நடத்தினர்.
இனாம் மணியாச்சி தேவரின மக்கள், இளைஞர் அணி ஏற்பாட்டில் பெண்கள் 501 பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
வீரவாஞ்சி நகர் தேவரின மக்கள், இளைஞர் அணியினர் ஏற்பாட்டில் 401 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, தேவர் சிலை முன்பு மரியாதை செலுத்தினா்.
சரமாரி அம்மன் கோவில் தெரு தேவரின மக்கள் 301 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.
ஒரு ஊர்வலத்தின் நடுவே சிறுமி ஒருவர் வேலுநாச்சியார் வேடமணிந்து வந்தது அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தது.
ஊர்வலங்களாக கொண்டு வரப்பட்ட பால் தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த சிறிய தேவர் வெண்கல சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை சிலை பராமரிப்பாளர் ஆறுமுக பாண்டியன் செய்திருந்தார். அவரது சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது