நாளை 1-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்ட விவாதங்களில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

 நாளை 1-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்ட விவாதங்களில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் ஆண்டு தோறும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்றும் அன்றை தினம் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து 1.11.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ள

இக் கிராம சபைக் கூட்டத்தின் போது அனைத்துத்துறை தொடர்பான கண்காட்சிகள், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பரு இயக்கம் வரை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவித்து அங்கீகரித்தல், பொது மக்கள் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

இக்கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க நம்ம கிராம சபை என்ற கணினி, தொலைபேசி, மென்பொருள் உருவாக்கப்பட்டு அதன்படி நிகழ்வுகளை பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தினத்தன்று நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். இக் கிராம சபைக் கூட்டங்களில் ஊரகப்பகுதி மக்கள் பெருவாரியாக பங்கெடுத்து கிராம சபைக் கூட்ட விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *