• May 9, 2024

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

 தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) யமுனா வரவேற்று பேசினார்.. தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கற்பகம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.. 

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) பொன் இசக்கி, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), சுந்தரலிங்கம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, தோல் நோய் துறைத் தலைவர் ததேயூஸ் மற்றும் மருத்துவர்கள் சந்தியா வதனா, தனலட்சுமி, செந்தில் செல்வன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் விழா பேருரை நிகழ்த்தி தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்களை கவுரவப்படுத்தினார். மேலும் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்ட தொழுநோய் விழிப்புணர்வு பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு தெற்கு காவல் நிலையம் வழியாக அரசு மருத்துவமனை வந்தடைந்தது. பேரணியை மாவட்ட வருவாய் அலு.வலர் கொடியசைத்து தொடங்கி  வைத்தார். மாவட்ட நலக்கல்வியாளர் முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *