• May 20, 2024

தென் இந்திய ஆணழகன் போட்டி: திருப்பூரில் வசிக்கும் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் 3-வது இடம் பிடித்தார்

 தென் இந்திய ஆணழகன் போட்டி: திருப்பூரில் வசிக்கும் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் 3-வது இடம் பிடித்தார்

சேலத்தில் தென் இந்திய ஆனழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர்.

65 முதல் 70 கிலோ எடைபிரிவினருக்கான ஆணழகன் போட்டியில்  கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமண முகேஷ் என்பவரின் மகன் எல்.மஹாராஜன் என்ற 21 வயது இளைஞர் பங்கேற்றார்.

இவர் மேடையில் தோன்றி உடல் வலிமை  சாகசங்கள் செய்து காட்டினார், இவரைப்போல் ஒவ்வொருவராக மேடையில் தங்கள் உடல் கட்டமைப்பை காட்டி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர், இறுதியில் எல்.மஹாராஜனுக்கு 3-வது பரிசு கிடைத்தது,. இவருக்கு மேடையில் வெண்கல கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது,

ஆணழகன் போட்டியில் 3 வது இடம் பிடித்த மஹாராஜன் கடந்த 1 ½ வருடமாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். தற்போது கோவை ரத்தினம் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மஹாராஜனின் தந்தை லட்சுமண முகேஷ், திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதனால் குடும்பத்துடன் திருப்பூரில் வசிக்கும் மஹாராஜன் ஏற்கனவே மிஸ்டர் திருப்பூர் ஆணழகன் போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் பட்டம் வெல்வதே எனது குறிக்கோள் என்று மஹாராஜன் கூறினார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *