• May 8, 2024

போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் முயற்சி; தி.மு.க.மீது தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார் புகார்

 போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் முயற்சி; தி.மு.க.மீது தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார் புகார்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்து அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில்  தேர்தலைப் பொறுத்தவரையில் நியாயமாகவும்,அமைதியாகவும்,நேர்மையாகவும், அதேபோல அதிகார துஷ்பிரயோகம் போன்ற அத்தனையும் தி.மு.க. கட்டவிழுத்து விடுகின்ற ஒரு  நிலையில் அதனை எல்லாம் முழுமையாகத் தடுத்து, சுதந்திரமான,நியாயமான தேர்தலை நடத்தவேண்டும் என்ற வகையிலே தேர்தல் ஆணையரிடத்தில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அவரும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை முழுக்க,முழுக்க தி.மு.க. இந்த விடியா அரசு நிர்வாகத்தை முழுமையாக முடுக்கிவிட்டு,. மக்கள் இந்த விடியா அரசு மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற சூழ்நிலையில் குறுக்கு  வழியிலே போலியான வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காக அனைத்து விதமான அத்துமீறல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அத்தனையும் அரங்கேற்றி வருகிறது.

அதற்கு முத்தாய்பாக்கத்தான் ஒரு கூட்டத்திலேகூட உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு,அவரின் பேச்சைக் கேட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஜனநாயகம் செத்துவிட்டது என்ற வகையிலேதான் அவர் உரையாடல் இருந்தது. திருமங்கலம் பார்முலா போன்று முழுமையான அளவுக்குப் பணத்தை மட்டுமே,பணநாயகத்தை மட்டுமே எடுத்து,பண ஆயுதத்தை எடுத்து, அந்த வகையில் அவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டுள்ளது உங்கள்  அனைவருக்கும் நிச்சயமாகத் தெரியும்.

இதுபோன்ற நிலையில் இதுபோன்ற நிலையைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு 100 சதவீதம் அளவுக்கு நியாயமான சுதந்திரமான ,அமைதியான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற வகையிலே கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு

கேள்வி : இந்த தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே

பதில் : இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திமுகவைப் பொறுத்தவரையில் முடிவுரைக்கு முடிவு எழுதுகின்ற வகையில்தான் முடிவுகள் இருக்கும். மக்களைப் பொறுத்தவரையில் இன்றைக்குக் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டுள்ளது. தினந்தோறும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,ஆட்கடத்தல்,கட்ட பஞ்சாயத்து நடந்துவருகிறது.போதை மாநிலமாக இன்றைக்குத் தமிழ்நாடு மாறி இன்றைக்கு எதையுமே கண்டுகொள்ளாத ஏதேச்சிதிகார சர்வாதிகார  அரசாகச் செயல்பட்டுவருகிறது.முற்போக்கான அரசு என்று இல்லாமல் பிற்போக்கான அரசாகச் செயல்பட்டுவருகிறது.இதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள். சரியான பதிலடியை இந்த விடியா திமுக அரசுக்குத்  தருவதன் மூலம் இதனுடைய எதிரொலி கண்டிப்பாக  2024 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 பதும் நமதே என்ற அடிப்படையில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்..இதுதான் திமுகவுக்குக் கடைசி தேர்தல் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி : இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லையே…பாஜக.வுக்காக காத்துக்கொண்டுள்ளீர்களா

பதில் : வரும் 7 ம் தேதி வரை காலம் உள்ளது.

கேள்வி : வழக்கமாக அதிமுக தேர்தல் தேதி அறிவித்தவுடனே வேட்பாளாரை அறிவிக்கும் நிலை இருந்ததே

பதில் : களத்தில் நாங்கள்தான் இருக்கிறோம்.வெற்றி பெறப்போவது நாங்கள்தான்.தேர்தல் ஆணையம் அறிவித்த காலத்திற்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

கேள்வி : தேர்தல் அதிகாரியிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்

பதில் : வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஒரு நம்ப தகுந்த தகவல் ,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிட்பட்ட வழக்கறிஞர்கள்,அந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அனைவரும் அங்குத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்கள். போலி அடையாள அட்டை தயாரித்து அதன் மூலமாக பூத்தை கைப்பற்றுதல்,பூத்தை சூறையாடுவது இதுபோன்ற பணிகளைச் செய்யும் வகையில்,நம்ப தகுந்த தகவல் கிடைத்ததன் அடிப்படையிலே இந்த தகவலை அங்கும் சொல்லிவிட்டோம்.இங்கேயும் சொல்லி விட்டோம். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் முயற்சியில் திமுக  அரசு,திமுகவினர் ஈடுப்பட்டுள்ளார்கள் எனவே இதனை எல்லாம் தடுத்து உண்மையான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கவேண்டும்  என்றும் போலி வாக்காளர் அடையாள அட்டையை நீங்கள் அனுமதிக்கக்கூடாது  என்றும் இதனை ஆரம்பக் கட்டத்திலே தடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

கேள்வி : அதிமுகவை ஏலம் விட்டுவருகிறார்கள் என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே

பதில்  :அவர்கள் கட்சியில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. ஒரு அமைச்சர் கல்லை தூக்கிப்போடுகிறார்.அரசமைப்பு சட்டப்படி உறுதிமொழி எடுப்பவர்கள் இப்படிச் செய்வார்கள்.நாசரைப் பார்த்தால் இனி பயந்து ஓடும் நிலைதான் உள்ளது.உதயநிதி வந்த கூட்டத்தில் ஒரு அமைச்சர் இறங்கு கீழே என்று அடிக்கிறார். ஏற்றிவிட்டவன் தொண்டன்.அவரை இறங்குடா என்று அடிக்கிறார். உத்தமசிகாமணி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஓசி ஓசி என்று பேசுகிறார். ஆதிதிராவிட சமுதாயம் என்று மேடையிலே பேசுகிறார்.கே.கே.எஸ்.எஸ்.ஆர். உட்கார்ந்து கொண்டு மனுவை வாங்குகிறார்.நரிக்குறவர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் செயலை செய்தார்.மனுவை அளித்தவர் தலையில் அமைச்சர் அடித்தார்.இப்படி ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கிறது. ஏலம் போடும் அளவிற்கு உங்கள் நடவடிக்கை உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *