• May 8, 2024

அரசு செலவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலையை செய்கிறது; தமிழக அரசு மீது டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 அரசு செலவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலையை செய்கிறது; தமிழக அரசு மீது டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு பொய்யாக தொடுக்கப்பட்டது என்று கூறி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறது.

இது பற்றி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அரசு இயந்திரத்தை மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலே.பணம் என்பது மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் சாலை வசதி,மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்யவேண்டும் துறைகளுக்கு நிதி ஒதுக்கி துறைகளை வளர்க்கவேண்டும்.

ஆனால் அதனைச் செய்வதை விட்டுவிட்டு நம்முடைய வரிப் பணம் எதற்காகச் செலவாகிறது என்றால் முழுக்க,,முழுக்க,சமூக வலைத்தளத்தில் ஏதாவது கருத்து போட்டால் அவர்களைக் கைது செய்வது.அவர் விடுதலை பெற்றுவிட்டால் மேல் முறையீடு செய்வது.அதுபோலத்தான் இன்றைக்கு ஒரு பொய்வழக்கு போட்டு,என் மீது பொய்வழக்குப் போட்டு ஆனந்தப்பட்டார்கள்.

இதனை ஒரு பொய்வழக்கு என்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இது ஒரு தனி வழக்கு.இது சகோதரர்களுக்கு இடையேயான பிரச்சினை.அவர்களுக்கு நில பிரச்சனை என்றால் அவர்கள்தான் மேல் முறையீடு செய்யவேண்டும்.ஆனால் அரசு  மேல் முறையீடு செய்கிறது.

அரசு மேல் முறையீடு செய்கிறது என்றால் எங்கள் கட்சி மீதும்,என் மீதும் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது தெரியும்.நாங்கள் ஊழல் குறித்துப் பேசுகிறோம்.அக்கிரமங்களைச் சொல்கிறோம்.அநியாயத்தைச் சொல்கிறோம். ஜனநாயக விரோத செயல்களைச் சொல்கிறோம்.இப்படி அனைத்தையும் சொல்லும் காரணத்தினால் அரசு செலவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலையைச் செய்துவருகிறது.

உங்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்கிறது.இதுபோல அனைத்திற்கும் இருக்கவேண்டுமல்லவா. வருமானத்திற்கு அதிகமான சொத்து சொத்துசேர்த்த அமைச்சர் கீதா ஜீவன் வழக்கு டிசம்பர் 2022  தள்ளுபடி செய்யப்படுகிறது.இதன் மீது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யவேண்டியதுதானே. நேர்மையான அரசு,,பாரபட்சமில்லாத அரசாக இருந்தால் ஒரு ஊழல் பேர்வழி.ஊழலில் மொத்த உருவாக்கமாக இருக்கின்ற திமுகவைச் சேர்ந்த அத்தனை பேரும் ஊழல் செய்த நிலையிலே அவர்கள் வழக்கு மீது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. 

அமைச்சர் தங்கம் தென்னரசு  ஊழல் தொடர்பாக வழக்கு டிசம்பர் 2022  தள்ளுபடி செய்யப்பட்டது.இதன் மீது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. அமைச்சர்கள் நேரு,பெரியசாமி,ரகுபதி இவர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் ஊழல்வாதிகள்.இந்த ஊழல்வாதிகள் இன்றைக்கு உத்தமர்கள்.இன்றைக்கு அவர்கள் மீதான கிரிமனல் மேல்முறையீடு பெண்டிங்காக உள்ளது. ஏன் இதனை வேகப்படுத்தவில்லை.

ஜெயக்குமார் வழக்கில் அதாவது சகோதரர்கள் வழக்கில் மட்டும் துரிதமாகப் போகத் தெரிகிறது.இவர்கள் வழக்கு மீது ஏன் துரிதமாகப் போகவில்லை. ஊழல்வாதிகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற ஒரு அரசு,.அமைச்சர் துரைமுருகன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிணற்றில் போட்ட கல் போல அப்படியே உள்ளது.இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

நாங்கள் உத்தமர்கள்.வானத்திலிருந்து குதித்துள்ளோம்.எங்களைப் போலப் பரிசுத்தமானவர்கள் யாருமே இல்லை இந்த உலகத்திலே ஊழல் செய்யாத நபர்கள் என்று சொல்லிவிட்டு இவர்களுக்குத் தண்டனை வாங்கி அளித்திருந்தால் மக்கள் உங்களை நம்புவார்கள். இதனை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு என் வழக்கு மீது மேல் முறையீடு செய்கிறீர்கள்.நீங்கள் எங்குச் சென்றாலும் நீதியை நிலைநாட்ட எங்களுக்குத் தெரியும்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *