பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்


கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார்.
`தமிழ் எங்கள் உயிர்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் ரவிக்குமார், `பாரதிதாசனும் தொழிலாளர்களும்’ என்ற தலைப்பில் பிஎஸ்என்எல் துரைராஜ், `பெரியாரும் பாரதிதாசனும்’ என்ற தலைப்பில் உதவி தலைமை ஆசிரியை முருகசரஸ்வதி, `பாரதிதாசனும் பொதுவுடமையும்’ தலைப்பில் இசை ஆசிரியர் அமலபுஷ்பம் ஆகியோர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
கருத்தரங்கில் ஐஎன்டியூசி ராஜசேகரன் பழனிச்சாமி, மகேந்திரன், காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அருள்தாஸ், வழக்கறிஞர் முத்துக்குமார், எச்.எம்.எஸ்/ வினோபா, மக்கள் நல அறக்கட்டளை மாரி முத்துக்குமார், ஜெகன் வினோத் குமார் பிசியோதெரபி மருத்துவர் வினோதினி தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, தொழிலதிபர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்


