கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கான, மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து டிப்போ அருகில் நடைபெற்றது.
தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்வில் வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்,கிளை நிர்வாகிகள், சார்பு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழமைகள் என ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்







