கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் தமிழ் வாரவிழா


தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனக் கூறிய பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினமான ஏப்ரல் – 29ம் தேதியை தமிழக முதல்வர் சட்டசபை கூட்டத்தொடரில் ஏப்-29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
தமிழக முதல்வரின் அறிவிப்பினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தமிழ் வார விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ், ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தமிழ் துறை தலைவர் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழ் பாடபிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
நிகழச்சியில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நூலகர் செண்பகாதேவி நன்றி கூறினார்.


