ஊர்காவல் படை பெண் தளபதிக்கு போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து

தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி டெல்லி பொது இயக்குநரகம் – தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
உள்துறை அமைச்சகம் மூலமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற ஊர்க்காவல் படை படைத் தளபதி உலகம்மாளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இன்று (29.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார். தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா உடனிருந்தார்.
