கோவில்பட்டி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் விதமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதத்தின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனையின்படி இப்பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 பள்ளிகளிலிருந்தும் கயத்தார் ஒன்றியத்திலிருந்து ஒரு பள்ளி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திலிருந்து ஒரு பள்ளியும் பங்கேற்றன, பள்ளிக்கு 24 உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 144 பேர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் மாநில கருத்தாளர்களாக சிவரஞ்சனி, நவீன்குமார் செயல்பட்டனர். அவர்கள், குழந்தைகளின் அடிப்படை உரிமைகள். பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் பங்களிப்பு மற்றும் மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி வட்டார வளமையம் மேற்பார்வையாளர் (பொ) இரா.நட்டாத்தி நன்றி கூறினார்.








