கோவில்பட்டி கிரா நினைவரங்கத்தில் ‘வாசகம்’ உரையாடல் நிகழ்ச்சி

கோவில்பட்டி கிரா நினைவரங்கத்தில் போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எழுத்தாளர் தங்கத்துரையரசி ஏற்பாடு செய்திருந்த ‘வாசகம்’ என்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
எழுத்தாளர் கண்மணிராசா எழுதிய ‘கூத்து’ சிறுகதைத் தொகுப்பு குறித்து அதனை வாசித்தவர்கள் தங்கள் வாசக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
போன்சாய் புக்ஸ் ப்ரியதர்ஷினி, சிறார் எழுத்தாளர் வரகவி முருகேசன், ஜீவாசுரேஷ், மாரிச்செல்வி,மகாலட்சுமி,இந்துமதி,எழுத்தாளர்கள் ராம்சித்ரா,பொன்னு லட்சுமி,மழயிசை, உஷா,பத்மா சிங்கராயன், முகிலன், முத்து முருகன்,தினகரன்,குமரேசன்,செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொகுப்பிலுள்ள கதைகள் குறித்துப் பேசினர்.
ஒரு படைப்பு குறித்து சில புதிய வாசகர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். கண்மணிராசா நிகழ்வின் தொடக்கவுரையோடு ஏற்புரையும் நிகழ்த்தினார். பாடகர் சந்திரசேகர் பாடினார். கல்லூரி முதல்வர் காமராஜ் கருத்துரைக்க, கவிஞர் மாரிமுத்து நன்றி கூறினார்.


