• April 30, 2025

`விஜயகாந்துக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்’-தேமுதிக செயற்குழுவில் தீர்மானம்

 `விஜயகாந்துக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்’-தேமுதிக செயற்குழுவில் தீர்மானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

*ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.’

*தேமுதிக  நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.

*விஜயகாந்துக்கு  மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்

*வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

*தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் மதுபானம் (tasmac) விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டும்.

*தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் இச்சம்பவங்கள் எதிர்காலத்தில்  நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

*கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்

*பட்டாசு ஆலைகளின் வெடிவிபத்து என்பது சாபக்கேடாக உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தும், இனி இதுபோன்று உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *