கோவில்பட்டியில் தென் மண்டல சிலம்பம் போட்டி; டாக்டர் தாமோதரன் பரிசு கோப்பை வழங்கினார்

தென் மண்டல அளவிலான சிலம்பம் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மகாராஜன்,கஸ்தூரிபா பள்ளி தாளாளர் சரஸ்வதிசுபா, சிதம்பரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை மீனா,கணேஷ்கா, சிலம்பப் பயிற்சி பள்ளி ஆசான் மணிகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்
போட்டியை கோவில்பட்டி போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் எட்டயபுரம் பாரதி சிலம்பம் பவுண்டேசன் மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். 2-வது இடத்தை தூத்துக்குடி கணேஷ்கா சிலம்பாட்ட பயிற்சி கழக மாணவர்களும், 3-வது இடத்தை கோவில்பட்டி அனைத்து விளையாட்டு சங்க மாணவர்களும், 4-வது இடத்தை தூத்துக்குடி ஞானம் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவர்களும், 5-வது இடத்தை நாலாட்டின்புதூர் எஸ்.எப்.எஸ். பள்ளி மாணவர்களும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமோதரன் (கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை) பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். ஏற்பாடுகளை அனைத்து விளையாட்டு சங்க நிறுவனர் காசிமாரியப்பன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாஸ்டர் மகேந்திரன்,கல்லூரி உடற்கல்வி இயக்குனர் உமாசங்கர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்


