கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்

கோவில்பட்டி சேகரம் சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கம், கடலையூர் சேகரம் சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலயம், மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்புரை பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமிக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் கடலையூர் டிஎன்டீடிஏ. நடு நடுநிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு கடலையூர் சேகர குரு சிமியோன் பிரபு டேனியல் தலைமை தாங்கினார், சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பி, ஜெயராஜ், ஏசுராஜா, மிகாவேல், பன்னீர்செல்வம், முத்துசாமி, ஆசிரியர் ஆபிரகாம், முத்துசெல்வம், மனோஜ், பாண்டித்துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நோயாளிகளுக்கு கிட்டபார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்புரை மற்றும் அனைத்து கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது,. மேலும் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு அன்றைய தினமே கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான மருந்து, தங்கும்வசதி, உணவு, மற்றும் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்திருந்தனர்.
முகாமில் கடலையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்


