கோவில்பட்டியில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் கிழக்கு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.. கொள்கை பரப்பு நிர்வாகி வீரபாண்டி மகேஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைமை நிர்வாகி பாலா என்ற பாலசுப்பிரமணியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

மேலும் புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் குழந்தைகள், பொன்ராஜவேல், சாய்ராகவி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் (பொறுப்பு) செல்வின் சுந்தர், மாவட்ட இளைஞரணி நிர்வாகி ராஜா, மாணவரணி நிர்வாகி செண்பகராஜன், மகளிரணி நிர்வாகிகள் செல்வி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


