கோவில்பட்டியில் அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம்


தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் கோவில்பட்டி நகர அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கி,ஆலோசனைகளை வழங்கினார். நகரச்செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர் செண்பகமூர்த்தி, கவியரசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி,ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன்,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அம்பிகை பாலன்,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்


