4 வது ஆண்டு நினைவு தினம்: கி. ராஜநாராயணன் உருவசிலைக்கு மரியாதை

சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 4 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பாக, கிளைச் செயலாளர் சக்தி செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
