தூத்துக்குடியில் சிறுவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளையும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
4-ம் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளைத் தலைவர் :திருக்குடும்ப மேரி, செயலாளர்: வாலண்டினா, மற்றும் திருச்செந்தூர் கிளைச் செயலாளர்: சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.சி.எ.க.ச.கோவில்பட்டி கிளை தலைவர் மணிமொழி நங்கை ஆசிரியர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் பாடல், விளையாட்டு,கதை என பல நிகழ்ச்சி நடத்தி குழந்தைகளைக் குதூகலப்படுத்தினார்கள்.

குழந்தைகளும் பாடல்கள் பாடியும், கதைகள் சொல்லியும் மகிழ்ந்தனர்.தொடர்ந்து குழந்தைகளின் நினைவுத் திறனை மேம்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடந்தன.
மாவட்ட மைய நூலகம் சார்பில் சிறப்பு அழைப்பாளருக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஆத்தூர் அறிவுச் சுடர் படிப்பகத்தில் 225 புத்தகங்களுக்கு மேல் வாசித்த அரசுப் பள்ளி மாணவர் முத்து சரண் தன்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. நூலக அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
