ராணுவ நடவடிக்கையை ஆதரித்து கோவில்பட்டியில் பாஜகவினர் பேரணி ; தேசியகொடி ஏந்தி சென்றனர்


காஷ்மீர் பகல்ஹாமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து இந்திய அரசு மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரித்தும் முப்படை வீரர்களின் வீரத்தையும்,தியாகத்தையும் போற்றும் வகையில் கோவில்பட்டியில் (திரங்கா யாத்திரை)தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த இந்த பேரணி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு,மாதாங்கோவில் ரோடு,எட்டயபுரம் ரோடு வழியாக காந்தி மைதானத்தில் பேரணி நிறைவு பெற்றது.
பேரணியில் பாஜக மாநில நிர்வாகி சிவந்தி நாராயணன்,முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்டத் துணைத் தலைவர்கள் லிங்கேஸ்வரி, சித்ரா, பொதுச் செயலாளர் வேல்ராஜ்,செயலாளர் ராஜ்குமார்,பொருளாளர் சீனிவாசன், நகரத் தலைவர் காளிதாசன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் பிஜேபி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
