தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் அறிவிப்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் ஆகியவை சார்பாக வேலூரில் வருகிற 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் தூத்துக்குடி , நீலகிரி, செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்ட அணிகள் “E” பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.

சிறப்பாக விளையாடும் வீரர்களை தமிழக ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட அழைத்துச் செல்லப்படுவர் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அணி தேர்வில் 22 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து பயிற்சி முகாம் நடைபெற்றது
இதில் சிறப்பாக விளையாடிய 18 வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இன்று இரவு வேலூருக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள் .

இந்த வீரர்களுக்கு இலுப்பையூரணி ஆக்கி கிளப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், ரமேஷ், ஆகியோர் வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர் மாவட்ட ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் வருமாறு
முகுந்தன் (அணி தலைவர்) ஜெகதீஷ், செல்வமுகில், சந்தோஷ், ஹரி ஆகாஷ் , கபிலன், பிரின்ஸ் , கருப்பசாமி, மாதேஷ் குமார், நிஷாந்த், மாதவன், பாலவசந்த், ஈஸ்வர், நிதீஷ் குமார், சரவணக்குமார், ராகுல் பாண்டியன், மாரிசெல்வம், விஷ்வா , அணியின் பயிற்சியாளர் சதீஷ் மேலாளர் முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர்

விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் குரு சித்திர சண்முகபாரதி, காளிமுத்து பாண்டியராஜா, மாரியப்பன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன் சுரேந்திரன் , சுரேஷ் குமார் , வேல்முருகன், மணிகண்டன், மகேஷ் குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
