கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி பொருநை மருத்துவமனை ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, பொருறை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் மருத்துவ முகாமினை தொடக்கி வைத்தார். டாக்டர்கள் நாகரத்தினம்,சிவக்குமார்,பாலசுகுமார்,சூரிய பிரகாஷ்,மோனிகா, ஆகியோர் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
முகாமின்போது இஜிசி, இரத்த அழுத்தம், சுகர், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன்,பாபு,முத்துச்செல்வம், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் துணை செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

