கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை குழுவுக்கு வரவேற்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை குழு துரை மற்றும் கிஷோர் பிரசாந்த் ஏற்பாட்டில் வந்தது,
பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் யாத்திரை குழுவிற்கு கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ஐ என் டி யு சி ராஜசேகரன்,சமூக ஊடகபிரிவு தலைவர் ராஜசேகரன்,காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜ், மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி, சிவப்பிரகாசம்,திருப்பதி ராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரவிந்த், சுந்தர்ராஜ், ராஜாபாண்டி, மகேந்திரன், அய்யாதுரை,சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பழனிசாமி மற்றும் முத்து, சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை குழு கன்னியாகுமரி சென்றதும் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.


