• May 19, 2025

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

 மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (19.5.2025) நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.. 

அத்தனை மனுக்கள் மீதும் உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.2,72,000/- இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.50,000/- நிரந்தர குறைபாடு தவிர்த்து மருத்துவ செலவீனத்தொகை பெறுவதற்கான ஆணையையும், 50 பயனாளிகளுக்கு ரூ.4,19,920/- கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு ரூ.4,19,920/- மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் ஆக மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.9,64,420/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைத்தலைவர் வசந்தன், மேலாளர்கள் கார்த்திகேயன், கார்த்திஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *