கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பரிசு கூப்பன்


கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் வருகிற -21 முதல் ஜூன் – 4 ம்தேதி வரை புத்தகத் கண்காட்சி நடைபெற உள்ளது. இங்கு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும்,.
இதையொட்டி மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்திட கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள்(எஸ்.எஸ்.டி.எம்.) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக இளங்கலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசு கூப்பனைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான புத்தகத்தினை புத்தகத் கண்காட்சியில் 15% தள்ளுபடியுடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்
கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகபரிசு கூப்பன் வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.கல்லூரி பேராசிரியர்கள் செல்வலட்சுமி, விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ரூ 200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
