அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு
கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது,

இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நிறுவனத் தலைவர் ராஜா, செயலாளர் உதயா முத்துப்பாண்டியன், பொருளாளர் அசோக், நிர்வாகிகள் சக்தி சுப்பிரமணியன், ஜெயராஜ், ரவீந்திரன், பாதாள முத்து, பிரபு, செல்வம் ஆகியோர் ஏற்பாட்டில், இப்பள்ளியில் 2024 -25 ஆம் கல்வியாண்டில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார். இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜாமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்







