முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை மாநாடு பால்வண்ணம் நினைவு நூலகத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு, கிளைத்தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார்.. கிளை உறுப்பினர் ரம்யா வரவேற்று பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் அஞ்சலி தீர்மானம் நிகழ்த்தினார். மாநாட்டினை தொடக்கி வைத்து தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினரும், சாகித்ய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளருமான உதயசங்கர் பேசினார். கிளைச் செயலாளர் முத்துராஜ் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். வரவு செலவு அறிக்கையை கிளை நிர்வாகி முருகேஸ்வரி முன் வைத்தார்.மாவட்டத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில்,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளை தடுத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும்,
*மாநில அரசு சாகித்ய அகடாமி விருது வழங்க வேண்டும்,
*கோவில்பட்டி நகராட்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் கு அழகிரிசாமி பெயர் சூட்ட வேண்டும்,

*எழுத்தாளர்களின் முதல் புத்தகத்தை தமிழ்நாடு அரசு அனைத்து அரசு நூலகத்திற்கு வழங்க வேண்டும்,
*பள்ளி பாட புத்தகங்களில் சாதி ரீதியான கருத்துக்களை நீக்கி சாதி கொடுமைகளுக்கு எதிராக போராடிய தலைவர்களின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும்,
*மதரீதியான பிரிவு பிரிவினையை தூண்டும் படங்களுக்கு தேசிய விருது கொடுக்கக் கூடாது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை கிளை நிர்வாகி ராஜலட்சுமி முன் மொழிந்தார்.,
தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள்= தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் தலைவராக அபிராமி முருகன், செயலாளர் முத்துராஜ், துணைத்தலைவராக தடவை பொன்னுச்சாமி, துணை செயலாளராக ராஜலட்சுமி உட்பட 12 பேர் கொண்ட புதிய கிளை தேர்வு செய்யப்பட்டது.ரம்யா நன்றி தெரிவித்து பேசினார்.







