கோவில்பட்டி கல்லூரி விழாவில் பிரமிடு அமைத்து மாணவர்கள் அசத்தல்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. உடற்கல்வியியல் துறை மாணவர்கள் பிரமிடு வடிவில் தேசிய கொடியுடன் நின்று அசத்தினர். விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினார். கல்லூரி உதவி பேராசிரியர் சுருதி,கல்லூரி மாணவர்கள் ஹரிஹரசுதன்,காவிய பிரியதர்ஷனி , ஆகியோர் சுதந்திர தின உரையாற்றினர்.
கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமணி,அருண்,சரவணகுமார்,ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி செயலாளர் பாஸ்கர், சங்க உறுப்பினர் ராஜேந்திரபிரசாத்,கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சியும், உடற்கல்வியில் துறை மாணவர்களின் பிரமிடு நிகழ்ச்சியும் நடந்தது. உடற்கல்வியியல் துறை மாணவர்கள் பிரமிடு அமைத்து தேசிய கொடியுடன் நின்று அசத்தினர். பார்வையாளர்களின் கைதட்டல் பலமாக இருந்தது.
விழா முடிவில் கல்லூரி ஆங்கிலதுறை பேராசிரியர் கற்குவேல்ராஜ் நன்றி கூறினார்.







