கோவில்பட்டி பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரதின கொண்டாட்டம்
கோவில்பட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
காமராஜ் மெட்ரிக் பள்ளி
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறைச் சங்க உபதலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி ,தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக உபதலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள் ராஜேந்திர பிரசாத், செல்வராஜ்,பள்ளிச் செயலாளர் வக்கீல் செல்வம் ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டனர். பள்ளிப் பொருளாளர் பாஸ்கரன்,பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார்,கண்ணன்,செல்வம்,பொன்ராமலிங்கம், ரவிமாணிக்கம் கலந்து கொண்டனர்.
மாணவர் ஓம்பிரகாஷ் வரவேற்றார்.நிகழ்ச்சிஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பிரபு, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியை கீதாராணி, விஜயலட்சுமி உட்பட இருபால் ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் செய்திருந்தனர்.

விழாவில் குழந்தைகள் பல்வேறு தேசத் தலைவர்களின் வேடமணிந்து பங்கேற்றனர், பல்வேறு கலைநிகழ்சிகள் நடனம், பேச்சு, சிலம்பம், கராத்தே போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
நகராட்சி தொடக்க பள்ளி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களாத்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கு நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய பெருமைகளை கூறி நம் இந்திய தேச ஒற்றுமைக்கு பாடுபடுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன், தலைமை ஆசிரியர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.செயலாளர் பழனிகுமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், தொழிலதிபர் பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், முத்துச்செல்வம், முன்னாள் தலைவர்கள் நாராயணசாமி, தாமோதர கண்ணன், உறுப்பினர்கள் சுப்புராஜ், கிருஷ்ணசாமி, கண்ணன்,நடராஜன், பூல்பாண்டியன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
உண்ணாமலை கல்லூரி
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகம் கொடிகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கல்லூரி முதல்வர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்லூரி முதல்வர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து. மாணவ மாணவியர்களால் மெல்லிசை தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டன. நடனம்,பேச்சுப்போட்டிகள் போன்ற கலாச்சார நடவடிக்கைகள் நடந்தது.வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் ,இனிப்பு வழங்கப்பட்டது.
ஜி.வி.என்.கல்லூரி
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்.) கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் முன்னிலையில் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தேசியக் கொடி ஏற்றனார்.

சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பாபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், உடற்கல்வி இயக்குநர்கள் செய்திருந்தனர்.
செவல்பட்டி அரசு பள்ளி
கோவில்பட்டியை அடுத்த செவல்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கோவில்பட்டி முன்னாள் திட்ட அலுவலர் சுப்பா ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசுகளும் வழங்கப்பட்டது .பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்று பேசினார்.
ஆசியாபார்ம்ஸ் நிறுவனம்
கோவில்பட்டி ஆசியா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு லாயல் மில் காலனி பூங்காவில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அனைவரையும் மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ஆசியா பார்ம்ஸ் நிறுவன தலைவர் ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார்.. நிறுவன தலைவர் பத்மா பாபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரவி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தினர்..நிறுவன மேலாளர் மெக்ஸி அனைவரையும் வரவேற்றார்.
ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். டாக்டர்கள் சஞ்சய் சிவநாராயணன், ஆத்மிகா, ஆகியோர் லாயல் மில் காலனி பூங்காவில் மரக்கன்று நடுபணியினை துவக்கி வைத்தனர்.
தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் கலந்துகொண்டு சுதந்திர தின உரையாற்றினார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன்,இலுப்பையூரனி முன்னாள் வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி, உள்பட ஆசியா பார்ம்ஸ் ஆசியாகேண்டி நிறுவன பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணியாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.







