தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் ரூ.5.49 கோடி நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 79வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 79பயனாளிகளுக்கு 5,49,39,919 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள் 515பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கி பாராட்டினார். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். விழாவில், மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்த சைனிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் பேக் பேண்ட் பைப் இசை நிகழ்ச்சி நடைபெற்றது







