கோவில்பட்டியில் 150 அடி நீள தேசிய கொடியுடன் ஊர்வலம்
சுதந்திர தின விழா மற்றும் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவில்பட்டியில் இன்று மாலை பாஜக சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி லெட்சுமி மில் மேம்பாலம் அருகே தொடங்கிய ஊர்வலம் மெயின் ரோடு, மாதாங்கோவில் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது.
இந்த ஊர்வலத்தில் சுமார் 150 அடி நீள தேசியக் கொடியை சுமந்தபடி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். பிரமாண்ட ஊர்வலத்தை சாலையின் இருபுறத்திலும் நின்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.







