2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பொன்முடி, விசாலாட்சியிடம் […]
சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை 6:24 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதனையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் ஸ்தபன கும்பகலச பூஜை யாக சாலையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் சனி மகா ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக […]
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.20
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று […]
\தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக மிக கனமழையால் முழுமையாக பாதிப்பு அடைந்த பயிர்கள், கால்நடைகள், மனித உயிர் இழப்புக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை கைகளில் வைத்து இருந்தனர், ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார்.சமூக நல ஆர்வலர் வழக்கறிஞர் அய்யலுசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரவி […]
முன்னாள் முதலமைச்சரும்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் உள்பட பலர் வந்து இருந்தனர்
கோவில்பட்டியில் கடந்த 17-ந் தேதி காலையில் இருந்து பெய்த தூறல் மழையானது நள்ளிரவுக்கு பிறகு கன மழையாக மாறி இரவு முழுவதும் பெய்தது. மறுநாள் 18-ந்தேதியும் நீடித்தது. இடைவிடாது பெய்த மழையினால் அத்தைகொண்டான், மூப்பன்பட்டி, மந்திதோப்பு, திட்டங்குளம் , இலுப்பையூரணி, மறவர்குளம் , தொட்டிலாம்பட்டி, இனம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம் உள்ளிட்ட அனைத்து கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அத்தைகொண்டான், மூப்பன்பட்டி கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயந்ததில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் வெள்ளம் புகுந்தது. மகாலட்சுமி நகர் […]
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கடந்த இரண்டு நாட்கள் கடுமையான மழையை சந்தித்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் , ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், நடுவக்குறிச்சி செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மோசமாக பாதிக்கபட்டுள்ளன. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். தாமிரபரணி ஆரங்கரையோர பகுதி கிராம மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் அவர்கள் படகுகள் மூலம் […]
கோவில்பட்டியில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவு முழுக்க பெய்த மழை இன்று மூன்றாவது நாளாக மழை நீடித்தது. கோவில்பட்டி மற்றும் இன்றி அப்பனேரி, நாலாட்டின்புதூர், பசுவந்தனை,இளையரசநேந்தல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கோவில்பட்டி மூப்பன்பட்டி கண்மாயில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பணிமனை டெப்போ அமைந்துள்ள பகுதிக்குள் காலை நேரத்தில் ஊழியர்கள் செல்ல இயலாத வண்ணம் இடுப்பளவு தண்ணீர் […]
கோவில்பட்டியில் ஆதிபராசக்தி பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் அப்பாசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு இரு முடி கட்டி பயணத்தை தொடங்கி வைத்தார். பின்னர் ஒரு திருமண மண்டபத்தில், விவேகானந்தா கேந்திரத்தின் 52 வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு அன்ன […]
கோவில்பட்டியில் இரவு பகலாக கனமழை-சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்; தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இடையிடையே தூறல் மழை பொழிந்தது. கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாரல் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இதனால் குளு குளு சீசன் நிலவியது. காலை முதல்பெய்த தூறல் மழையானது நள்ளிரவுக்கு பிறகு கனமழையாக மாறியது. இந்த மழை இரவு பகலாக பெய்தது.. இரவு முழுவதும் பெய்த […]







