• June 7, 2025

கோவில்பட்டி முத்து மாரியம்மன்  கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை

 கோவில்பட்டி முத்து மாரியம்மன்  கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை

சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை 6:24 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதனையொட்டி

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  மாலை 6 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் ஸ்தபன கும்பகலச பூஜை யாக சாலையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் சனி மகா ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.

 தொடர்ந்து  வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். இவ்பூஜையில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல்,செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *