கோவில்பட்டி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம் சில மணி நேரங்களில் மாயம்; 15 நாட்களுக்கு சீவலப்பேரி குடிநீர் விநியோகம் ரத்து
iஇளையரசனேந்தல் சாலையின் நேற்றைய தோற்றம். இன்று இந்த சாலை சகஜ நிலைக்கு வந்து விட்டது.
கோவில்பட்டியில் கடந்த 17-ந் தேதி காலையில் இருந்து பெய்த தூறல் மழையானது நள்ளிரவுக்கு பிறகு கன மழையாக மாறி இரவு முழுவதும் பெய்தது. மறுநாள் 18-ந்தேதியும் நீடித்தது. இடைவிடாது பெய்த மழையினால் அத்தைகொண்டான், மூப்பன்பட்டி, மந்திதோப்பு, திட்டங்குளம் , இலுப்பையூரணி, மறவர்குளம் , தொட்டிலாம்பட்டி, இனம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம் உள்ளிட்ட அனைத்து கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
அத்தைகொண்டான், மூப்பன்பட்டி கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயந்ததில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் வெள்ளம் புகுந்தது. மகாலட்சுமி நகர் பகுதிமுழுவதும் வெள்ள நீர் புகுந்து வீடுகளை சூழந்தது. இளையரசநேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டத,.
நேற்று மதியத்துக்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது. மாலையில் இருந்து மழை பெய்யாததால் சாலையில் ஆறாக ஓடிய வெள்ளம் வேகமாக வடியத்தொடங்கியது. ஒரு சில மணி நேரங்களில் அந்த வெள்ள நீர் முழுவதும் வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியது.
கோவில்பட்டியில் 50 சென்டிமீட்டர் அளவு மழை பெய்தும் பெரிய பாதிப்பு இன்றி பெரும்பாலும் சாலைகளில் தேங்கிய நீர் வடிந்து இயல்பு நிலைக்கு வந்து விட்டது..
இதனால் இன்று கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. வானிலை அராய்ச்சி நிலையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இருந்ததால் வங்கிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இருந்தது,.
கொவில்படி நகரில் முக்கிய சாலையிலும் மழை நீர் இல்லை. காலையில் சிறிது நேரம் வெயில் அடித்தது. பின்னர் வானம் மப்பும் மந்தாரமுகாக காட்சி அளிக்கிறது. .
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கவில்லை. எஸ்.எஸ்,டி.எம்.கல்லூரிக்கு எதிரே உள்ள ஓடை தூர்வாராததால் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
திருநெல்வேலி சீவலப்பேரி யில் இருந்து கோவில்பட்டி நகருக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது வருகிறது. அந்த பகுதியில் பெய்துள்ள பலத்த ,மழைகாரணமாக நீரேற்று நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு நாளாகும் என்பதால் இன்னும் 15 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என்று கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா அறிவித்துள்ளார். தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.







