ஊராட்சி பள்ளியில் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாத பிரச்சினை: கனிமொழி எம்.பி.தீர்த்து வைத்தார்
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்டு.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பெற்றோர்கள் உத்தரவின் பேரில் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவிகள் உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தனர். இதனால் காலை உணவு வீணாகும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் மன உளைச்சல் […]







