பாரதியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவிப்பு
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் மணி மண்டபத்தில் அவரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர்.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன். கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







