கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக கே.1 ரக மிளகாய் விதைகள் மற்றும் செங்காம்பு கருவேப்பிலை நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமண பயிர்கள் மேம்பாட்டு இயக்குனரக ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாரம்பரிய மற்றும் அதிக காரமுள்ள மிளகாய் ரகமான கோவில்பட்டி1-ஐ பரவலாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க செங்காம்பு கருவேப்பிலை பயிரிடுவதன் மூலம், தினசரி வருமானம் பெறவும் முயற்சி மேற்கொள்ளும் நோக்கத்துடன் ,இந்த நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை ஆராய்ச்சி நிலைய […]
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.ரத்ததான முகாமை பாரதீய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தொடக்கி வைத்தார், 25க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.மருத்துவர் தேவசேனா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரொடி, மாவட்ட செயலாளர் ஜெயஹர்ஷன், மாவட்ட துணைச்செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் பொன்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாரத்குமார்,ஆனந்த், காசிராஜன், பா.ஜனதா நகர […]
ஓசோன் படலத்தை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கோவில்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்ட்டது. கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பாபு ஆகியோர் முன்னிலை […]
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.மற்ற மாவட்டங்களில் இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3 அரசு தொடக்கப் […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் ம காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம்.கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி, முகமதுசாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம் மணியாச்சி, தோனுகால், படர்ந்தபுளி.எப்போதும்வென்றான்:- […]
விளாத்திகுளம் தொகுதி மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவது குறித்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. விழிப்புணர்வு நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நடைபயிற்சி மேற்கொண்டு கிராமத்தில் உள்ள குறைகளை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நடுவது குறித்து கிராம மக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்மார்க்கண்டேயன், ரூ.3 ஆயிரம் நன்கொடையை கிராம மக்களிடம் வழங்கினார்கள் .மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டி பராமரிப்பதற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகரன் பொறுப்பேற்றுள்ளார்.மார்க்கண்டேயன் […]
ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதி ஓசோன் படலத்தை பாதுகாக்க உலக நாடு முழுவதும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று நடந்த உலக ஓசோன் தின விழாவிற்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். ஊர்வன ஆராய்ச்சியாளர் பீட்டர் கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்ந்து செல்கின்ற விலங்கினங்களான பாம்பு, முதலை, […]
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் 17-ந்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம். துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி உபமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.இந்த தகவலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி மண்டல அளவிலான அரசு, அரசு உதவி பெறும் மெட்ரிக், சுயநிதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் இன்று தொடங்கின.கோவில்பட்டி வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் 24 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.விளையாட்டு போட்டி தொடக்கவிழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராஜ், தூத்துக்குடி மாவட்ட DIPE பால்ச்சாமி, கவுன்சிலர்கள் ஜோஸ்பின் லூர்துமேரி, கனகராஜ், வ.உ.சி.பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன், உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் ஆகியோர் கலந்து […]
கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா 114வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள பொ.தமிழரசன் நினைவு படிப்பகம் அருகே அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது, கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு சாதமும்,சாதமும் கலந்த அன்னதானம் வழங்கப்பட்டது.
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







