இலுப்பையூரணி ஊராட்சியில் மானிய கடன்: ஆய்வு கூட்டம்
![இலுப்பையூரணி ஊராட்சியில் மானிய கடன்: ஆய்வு கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/11/de997db4-aacd-4879-ae69-e468e3b1b6c1-850x431.jpg)
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி -2 பிற துறைகளுடன் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் -சிறப்பு முகாம் நடைபெற்றது, ஊராட்சி தலைவர் செல்வி சந்தனம் தலைமை தாங்கினார்.
மண்டல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட தொழில் மையம் நுண்ணாய்வாளர் ஞானபிரகாசம் , கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானிய கடன், இலவச பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்று திறனாளிகள் உபகரணங்கள் வழங்குதல் போன்றவை பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)