• May 20, 2024

பயிர்க்காப்பீட்டு நிலுவை தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 பயிர்க்காப்பீட்டு நிலுவை தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பாலம் அருகில் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பயிர்க்கப்பீட்டு நிலவை தொகையை உடனே வழங்க வேண்டும். அழிந்து போன மிளகாய், மக்காச்சோளம், பாசி பயிர், பருத்தி போன்ற அனைத்து பயிர்களுக்கும் காலதாமதம் இல்லாமல் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.
தரமற்ற உரங்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். விவசாயிகள் ஒரு மூட்டை உரம் வாங்கினால் அதற்கு இணையாக ஒரு பொருள் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தை நிறுத்த வேண்டும்,
விவசாய விளைபொருள்களுக்கு விதிக்கபப்ட்ட செஸ் வரியை ரத்து செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார்,. வடக்கு மாவட்ட தலவர் டி.எஸ்.நடராஜன். கிழக்கு மாவட்ட தலைவர் செங்கோட்டை வேலுச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.வெள்ளத்துரைபாண்டி, தெற்கு மாவட்ட தலைவர் எம்.சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பட்டத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர், அவர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *