கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் மணி மண்டபம்; முதல்- அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
.கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் முடிவடைந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. முதல் அமைச்சர் மு.க,ஸ்டாலின் இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார், அவருடன் ஆர்.டி.ஒ.,பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்,
மணிமண்டபம் திறப்பு தொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டியில் கரிசல் எழுத்து தந்தை கி.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு ரூ.1.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மணி மண்டப வளாகத்தில் கி.ராயநாராயணன் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
மணிமண்டபத்தை முதல் அமைச்சர் காணொளி காட்சி மூலம் நாளை 2-ந்தேதி திறந்து வைக்கிறார்.
அந்த சமயத்தில் இங்கு நடைபெறும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி இன்று ஆய்வு செய்ய வந்து இருக்கிறோம். நாளை திரண்டு வைத்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும்.
மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்படும். இவற்றை அவரது குடும்பத்தினர் வழங்கி இருக்கிறர்கள். புதுச்சேரியில் இருந்து கனிமொழி எம்.பி.மூலம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்படும்.
,மணி மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள நூலகத்தில் கி.ரா. எழுதிய அனைத்து நூல்களும் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் மற்ற எழுத்தாளர்களின் கரிசல் இலக்கிய புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெறும்.
இது தவிர டிஜிட்டல் நூலகத்தில் கி.ரா எழுதிய நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கும். அவற்றை பொதுமக்கள் வாசிக்க ஏற்பாடு செய்யப்படும்,
தூத்த்குடியில் புத்தக திருவிழா நடைபெற்றது. அதே போல் கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா நடத்துவது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்,.