• February 7, 2025

கோவில்பட்டி அருகே சூறாவளி காற்றுடன் மழை: நாசமான 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்களுக்கு நஷ்டஈடு; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை

 கோவில்பட்டி அருகே சூறாவளி காற்றுடன் மழை: நாசமான 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்களுக்கு நஷ்டஈடு; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் கடந்த 28-ந் தேதி மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
சேதமடைந்த பயிர்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியாரம்மாள், தாசில்தார் சுசீலா, வேளாண்மை உதவி இயக்குனர் சீ.நாகராஜ், வேளாண் அலுவலர் காயத்ரி, உதவி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்,
அப்போது வில்லிச்சேரி பஞ்சாயத்து தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறுகையில், வில்லிசேரி பகுதியில் மழைக்கு 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை வேளாண்மை துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *