பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றிய கிராமபெண்கள்
![பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றிய கிராமபெண்கள்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/94914675-58fd-432e-af02-2aeb2efee177-850x461.jpg)
விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம், அயன் கோடங்கிபட்டி, தாப்பாத்தி கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5.50 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கபட்டுள்ளன,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், இந்த பஸ் நிழற்குடைகளை திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட கிராமத்து பெண்களை கிராம பெண்களை குத்துவிளக்கு ஏற்றும்படி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.கேட்டுக்கொண்டார். இதை ஏற்று பெண்கள் மகிழ்ச்சியுடன் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இதை பார்த்து மகிழ்ந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., வீரப்பட்டி கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட்சாலை, விவசாய உலர்களம் அமைதல் உள்ளிட்ட பணிகளையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், பொறியாளர்கள்
ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)