• February 7, 2025

காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப 4-ம் தேதி எழுத்து தேர்வு; 10 ஊர்களில் நடக்கிறது

 காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப 4-ம் தேதி எழுத்து தேர்வு; 10 ஊர்களில் நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4.12.2022 (ஞாயிற்றுகிழமை) அன்று எழுத்துத் தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அதன் மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணையவழியில் https//agaram..tn.gov.in/onlineforms/formpage_open.php என்ற முகவரியில் சென்று பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி ச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் கூரபப்ட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *