சென்னை- தோகா விமானத்தில் திடீர் கோளாறு; டேக் ஆப் செய்ய முடியவில்லை

 சென்னை- தோகா விமானத்தில் திடீர் கோளாறு; டேக் ஆப் செய்ய முடியவில்லை

சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தோகா வுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் பஸ் வகை விமானம் புறப்படுவதற்கு தயார் ஆனது,
விமானத்தில் மொத்தம் 139 பயணிகள் இருந்தனர். விமானிகள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர். மொத்தமாக விமானத்தில் 146 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. பின்னர் டேக் ஆப் செய்ய கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி விமானத்தை டேக் ஆப் செய்யும் போது அதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டேக் ஆப் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை கடைசி வினாடியில் விமானிகள் கவனித்து உள்ளனர். இதை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
விமானத்தை டேக் ஆப் செய்ய விமானிகள் முயன்றபோது எஞ்சின்களில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன கோளாறு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விமானத்தை தொடர்ந்து டேக் ஆப் செய்து இருந்தால் அது பெரிய பிரச்சினையில்முடிந்து இருக்கும். விமானம் பெரிய விபத்தில் கூட சிக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் விமானத்தை டேக் ஆப் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். விமானி உரிய நேரத்தில் வேகமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு, 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் உயிர் தப்பினர். இந்த கோளாறுக்கான காரணம் தெரியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பயணம் தடைபட்ட பயணிகளுக்கு வேறு விமானம் 24 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *