ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை (22-ந்தேதி) காலை 8:30 மணிக்கு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கோவில்பட்டி நகர ம.தி.மு.க. சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி அளவில் கதிரேசன் மலை முதியோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கொடியேற்றும் இடங்கள்: 1.காந்தி மைதானம் 2.ஸ்டாலின் காலனி 3.பழனி […]
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனையை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், சப்- இன்ஸ் பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தனிப்படை போலீசார் எட்டயபுரம் ரோடு தொழில் பேட்டை அருகில் இரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தினா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த தடி வீராசாமி (வயது 52) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ல் அப்போது, […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் எந்திரங்கள் மூலம் ஏராளமான டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்களை தடுத்து நிறுத்தவும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சி.சி. மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.கூட்டத்திற்கு கவுரவ தலைவர் பிச்சையா தலைமை தாங்கினார், செயலாளர் துரைராஜ், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் ராமன் வரவேற்று பேசினார், தலைவர் ராமச்சந்திரன் சங்க வளர்ச்சி பற்றி பேசினார், சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் தொடர்பாகவும், மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன, துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட […]
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அளவில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எம்.பி. காளிதாசன் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப் பட்டது. போட்டியில் 72 அணிகள் கலந்து கொண்டன. காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பார்வையாளர்கள் திரண்டு வந்து ரசித்தனர், பகல், இரவு நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது, பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். போட்டியின் இறுதியில் […]
கரிசல் இலக்கத்தின் பிதாமகர் சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள கி.ரா. பிறந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:- கி.ரா. நாவல்கள், சிறுகதைகள்.. கரிசல் இலக்கியங்கள், வட்டார சொல் அகராதி எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்கு […]
கோவில்பட்டி அருகே, பழைய அப்பனேரி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 5-7-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயரில் படிப்பகம் ஒன்றினை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பனேரியில் நிறுவ பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து 45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதை யாரும் பொருட்படுத்த வில்லை. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பனேரிக்கு வந்திருந்தார். கோவில்பட்டி அண்ணா […]
கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் சார்பாக பருவகால நோய்களும் தடுப்பு முறைகளும் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு நூலக புரவலர் வினோபா தலைமை தாங்கினார்.நூலக பணியாளர் கலையரசி வரவேற்று பேசினார். சித்த மருத்துவர் டாக்டர். அபிநயா நோய் தடுப்பு முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நூலகர் அழகர்சாமி செய்திருந்தார்
கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26), சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தாராம். மேலும் மது அருந்தி விட்டுஅடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தந்தையிடம் மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டு […]
கோவில்பட்டியில் இன்று காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 8 மணியில் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாலை 3. மணிக்கு மேல் கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. 3.15 மணி அளவில் கன மழை பெய்யத்தொடங்கியது.மழையின்போது பலத்த காற்றுடன் எழுந்த இடிச்சத்தம் மக்களை பயமுறுத்தியது. மேலும் மின்னல் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







